கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய சடலம்: இரண்டு சந்தேகநபர்கள் கைது

கொழும்பு 07, வார்டு பகுதியில் முச்சக்கரவண்டியில் நபரொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜூலை 26 ஆம் திகதி கிராண்ட்பாஸ், சமகி மாவத்தை பகுதியில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
35 மற்றும் 48 வயதுடைய சந்தேகநபர்கள் கோனவில மற்றும் கிராண்ட்பாஸ் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட போது, சந்தேக நபர் ஒருவரிடம் 30 கிராம் 200 மில்லிகிராம் “ஐஸ்” போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கொழும்பு குற்றப்பிரிவு விசாரணைகளை தொடர்வதால் கொலைக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை
(Visited 28 times, 1 visits today)