துப்பாக்கி தயாரிக்கும் முறை குறித்து யூடியூபில் பதிவேற்றிய இருவர் கைது!
துப்பாக்கிகள் தயாரிக்கப்படும் வீடியோக்களை யூடியூபில் பதிவிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு துப்பாக்கிகள் மற்றும் அவற்றைத் தயாரிக்க பயன்படுத்திய உபகரணங்களுடன் களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வு பிரிவினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தத் துப்பாக்கிகளை பயன்படுத்தி சந்தேக நபர்கள் ஏதேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார்களா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
பதுரலிய சீலதொல பிரதேசத்தைச் சேர்ந்த 41 மற்றும் 21 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
(Visited 14 times, 1 visits today)





