கடும் நட்டத்தில் ட்விட்டர்!! எலோன் மஸ்க் கவலை
விளம்பரம் பாதியாகக் குறைந்ததாலும், அதிகக் கடனாலும் ட்விட்டர் நஷ்டமடைந்து வருகிறது என எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
“விளம்பர வருவாய் 50% சரிவு மற்றும் அதிக கடன் காரணமாக நாங்கள் இன்னும் எதிர்மறையான பணப்புழக்கத்தில் இருக்கிறோம்,” என்று மஸ்க் சனிக்கிழமை ஒரு ட்வீட் பதிவில் தெரிவித்துள்ளார்.
கடந்த இலையுதிர்காலத்தில் 44 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தில் ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தியதிலிருந்து, பல்வேறு மாற்றங்களை மஸ்க் செய்திருந்தார்.
கடந்த மே மாதம் புதிய தலைமை செயல் அதிகாரியையும் அவர் நியமித்திருந்தார். , விளம்பரத் துறையில் ஆழமான அகுபவம் கொண்ட லிண்டா யாக்காரினோவை தலைமை செயல் அதிகாரியாக நியமித்தார்.
ட்விட்டர் சமீபத்தில் சில பயனர்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு பார்க்க முடியும் என்பதற்கு புதிய வரம்புகளை விதித்து. மதிப்புமிக்க தரவை அங்கீகரிக்கப்படாத அணுகலைத் தடுக்க இந்த கட்டுப்பாடுகள் அவசியம் என்று மஸ்க் கூறினார்.
ட்விட்டர் நிறுவனத்திற்கு போட்டியாக் மெட்டா நிறுவனம் அண்மையில் புதிய செயலி ஒன்றையும் அறிமுகம் செய்திருந்தது. அதில் குறுகிய காலத்தில் மில்லியன் கணக்கான பயனர்கள் இணைந்தனர்.
இதற்கு பதிலளித்த ட்விட்டர், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தது.