அறிவியல் & தொழில்நுட்பம்

முடிவுக்கு வந்த டுவிட்டர் – முழுமையாக X ஆனது

டுவிட்டர் X தளமாக மாறிய நிலையில் அதன் இணைய முகவரி முழுமையாக எக்ஸ் அடையாளத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

2 வருடங்களுக்கு முன்னர் டுவிட்டர் சமூக ஊடக வலைதளத்தை வாங்கிய எலான் மஸ்க் அதனை தலைகீழ் மாற்றங்களுக்கு உள்ளாக்கினார்.

பணியாளர்கள் குறைப்பு, பயனர்களுக்கான கட்டண விகிதங்கள், லோகோ மற்றும் பெயர் மாற்றம் என நித்தம் பல அதிரடி மாற்றங்களை நிகழ்த்தி வந்தார். உள்ளடக்கத்திலும் பல உற்சாகமான மாற்றங்களை செய்தார். டுவிட்டர் என்பதை அனைத்துக்குமான செயலி அல்லது தளமாக அவர் மாற்றினார்.

டுவிட்டர் இடுகையின் வரம்புகளை உடைத்தார். பதிவின் நீளம் முதல், வீடியோக்களின் பல மணி நேர ஓட்டம் வரை அந்த மாற்றங்கள் தொடர்ந்தன. பல்வேறு கட்டண அடிப்படையில் பயனர்களை X தளம் இழுத்தடித்தாலும், பயனர்களுக்கும் தங்கள் வருவாயில் குறிப்பிட்ட பங்கினை தர ஆரம்பித்தன. இதனால் யூடியூப் பாணியில், கிரியேட்டர்களும் களமிறங்கி, வருவாய் ஈட்டினார்கள்.

இந்த மாற்றங்களின் உச்சமாக டுவிட்டர் என்ற பெயரும் ’எக்ஸ்’ என்பதாக கடந்தாண்டு ஜீலையில் மாற்றப்பட்டது.

எனினும் X தளத்தின் முகவரி குறிப்பிட்ட தொழில்நுட்ப காரணங்களால் twitter.com என்பதாகவே தொடர்ந்து வந்தது. எக்ஸ் தளமாக மாற்றப்பட்ட பின்னரும் அது டுவிட்டராக தொடர்ந்த நீடித்தது.

டுவிட்டர் தளம் என்பது X தளமாக எலான் மஸ்கால் மாற்றப்பட்ட பின்னரும், அதன் யுஆர்எல் மாற்றப்படவில்லை. அந்த மாற்றம் தற்போதுதான் நிகழ்ந்துள்ளது. இது குறித்து அறிவிப்பு வெளியிட்ட எக்ஸ் தளம், “எங்கள் யுஆர்எல்-ஐ மாற்றுவதை நாங்கள் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம். ஆனால் உங்கள் தனியுரிமை மற்றும் தரவுப் பாதுகாப்பு அமைப்புகள் அப்படியே இருக்கும்’ என்று தெரிவித்துள்ளது.

twitter.com என்பதை x.com என அதிகாரபூர்வமாக மாற்றப்பட்டதை, எலான் மஸ்க் இன்றைய தினம் மகிழ்வுடன் எக்ஸ் உலகுக்கு பகிர்ந்துள்ளார். ”அனைத்து முக்கிய அமைப்புகளும் தற்போது X.com-ல் உள்ளன” என தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.

(Visited 23 times, 1 visits today)

SR

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்