ISIS தலைவர் கொல்லப்பட்டதாக துருக்கி அதிபர் ஏரோடகன் அறிவிப்பு!

துருக்கி ராணுவத்தினர் சிரியாவில் ISIS தலைவர் அபு ஹூசேன் குவாரேஷியை சுட்டுக் கொன்றதாக அதிபர் ஏரோடகன் தெரிவித்துள்ளார்.
துருக்கியில் செய்தியாளர்களிடம் பேசிய ஏரோடகன் நீண்ட காலமாக உளவுத்துறையினர் அபு ஹூசேனை கண்காணித்து வந்துள்ளதாக கூறினார்.
அதன்படி நேற்று நடைபெற்ற ராணுவ நடவடிக்கையில் ISIS தலைவர் கொல்லப்பட்டதாக அவர் உறுதி செய்தார்.
இந்நிலையில் தீவிரவாத இயக்கங்கள் மீது தொடர்ந்து பாரபட்சமற்ற யுத்தம் தொடரும் என்றும் ஏரோடகன் உறுதிபடத் தெரிவித்தார்.இதன்போது தீவிரவாதிகள் தாக்குதலால் துருக்கியில் இதுவரை 300க்கும் அதிகமானோர் உயிரிழந்து விட்டனர்.
(Visited 16 times, 1 visits today)