துருக்கியில் விமானம் நிற்பதற்கு முன் எழுந்து நின்றால் அபராதம் – அமுலாகும் புதிய விதிமுறை
துருக்கி செல்லும் விமானம் தரையிறங்கி இருக்கை வார் குறீயிடு அணைவதற்கு முன்பு பயணிகள், எழுந்து நின்றால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் முறைப்பாடு அளித்ததைத் தொடர்ந்து அந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் துருக்கி சிவில் விமானப் போக்குவரவு ஆணையம் தெரிவித்துள்ளது.
புதிய விதிமுறை இம்மாதத் தொடக்கத்தில் நடப்புக்கு வந்துள்ளது.
விதிமுறையை மீறுவோருக்கு சுமார் 70 அபராதம் விதிக்கப்படும் என்று துருக்கியே ஊடகம் கூறியது.
ஆனால் ஆணையத்தின் வழிகாட்டியில் அபராதம் எவ்வளவு என்பது குறிப்பிடப்படவில்லை.
விமானம் நிற்பதற்கு முன்பே பயணிகள் தங்கள் பைகளை எடுக்கும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாகவும் அது குறித்து பலரும் முறைப்பாடு செய்துள்ளனர்.
துருக்கிக்கு ஆண்டுதோறும் பல மில்லியன் சுற்றுப்பயணிகள் செல்கின்றனர்.





