மத்திய கிழக்கு

அவுஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 62பேரின் சொத்துக்களை முடக்கிய துருக்கி!

துருக்கியில் இருந்து செயல்படும் குர்திஷ் போராளிக் குழுவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி, அவுஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் உள்ள 20 நிறுவனங்கள் மற்றும் 62 பேரின் உள்ளூர் சொத்துக்களை துருக்கி முடக்கியுள்ளது.

பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதை தடுக்கும் சட்டத்தின் வரம்பிற்குள் அவர்கள் செய்த செயல்கள் நியாயமான காரணங்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக துருக்கியின் கருவூலம் மற்றும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.குறித்த பட்டியலில் ஜேர்மனியில் இருந்து மூன்று அமைப்புகளும், சுவிட்சர்லாந்தில் இருந்து மற்றொரு மூன்று அமைப்புகளும் அடங்கும், இந்த இரு நாடுகளிலும் குர்திஷ் புலம்பெயர்ந்தோர் அதிகமாக வசிக்கின்றனர்.

அவுஸ்திரேலியா, இத்தாலி மற்றும் ஜப்பானில் இருந்தும் தலா இரண்டு அமைப்புகளையும் துருக்கி பட்டியலிட்டுள்ளது. அத்துடன், ஆஸ்திரியா, பெல்ஜியம், டென்மார்க், பிரான்ஸ், ஸ்வீடன், நார்வே, பிரித்தானியா மற்றும் ஈராக்-சிரியா ஆகிய நாடுகளில் இருந்து செயல்படும் அமைப்புகளும் பட்டியலிடப்பட்டுள்ளது.ஆனால், பட்டியலில் உள்ள ஸ்வீடன் அமைப்பு ஒன்று, தங்கள் குழு துருக்கியில் செயல்பாடுகள் மற்றும் சொத்துக்கள் இல்லாத மனிதாபிமான உதவி அமைப்பு என்று விளக்கமளித்துள்ளது.

இதனிடையே, ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் நேட்டோ அமைப்பில் இணைய கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் துருக்கி ஜனாதிபதி எர்டோகன் இந்த இரு நாடுகளின் கோரிக்கை மீது மறுப்பு பதிவு செய்திருந்தார்.

தற்போது கடந்த ஏப்ரல் மாதம் பின்லாந்தின் கோரிக்கையை துருக்கி ஆதரப்பிதாக குறிப்பிட்டுள்ளது. துருக்கி தொழிலாளர் கட்சி எனப்படும் அமைப்பை துருக்கி மட்டுமின்றி ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவும் தீவிரவாத அமைப்பு என்றே குறிப்பிட்டு வருகிறது.

(Visited 16 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.
error: Content is protected !!