லாஸ் ஏஞ்சல்ஸில் இடிந்து விழுந்த சுரங்கபாதை – களத்தில் இறங்கிய 100 மீட்பு படையினர்!
லாஸ் ஏஞ்சல்ஸில் பசிபிக் பெருங்கடலுடன் இணைக்கப்பட்ட ஒரு பெரிய சுரங்க பாதை இடிந்து விழுந்ததில் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்ளூர் நேரப்படி இரவு 8 மணியளவில் (இங்கிலாந்து அதிகாலை 4 மணிக்கு) சுரங்கப்பாதை சரிந்தபோது, ஊழியர்களுக்கும் தரையில் இருந்தவர்களுக்கும் தொடர்பு துண்டிக்கப்பட்டது.ஸ
சுமார் 100 தீயணைப்பு வீரர்கள் சம்பவ பகுதியில் இருப்பதாகவும், இடிபாடுகளுக்குள் இருந்து 30 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அவசரகால பணியாளர்கள் சிக்கிய நபர்களை மீட்க ஒரு பெரிய கூண்டு பொறிமுறையைப் பயன்படுத்தியதாக தீயணைப்பு சேவை மேலும் கூறப்பட்டுள்ளது.
(Visited 14 times, 1 visits today)





