காசநோய் மருந்து – Johnson & Johnson வெளியிட்ட அறிவிப்பு
காசநோய் மருந்துக்கான தன்னுடைய காப்புரிமையை நடைமுறைப்படுத்தப் போவதில்லை என அமெரிக்க மருந்தாக்க நிறுவனமான Johnson & Johnson அறிவித்துள்ளது.
குறைந்த, நடுத்தர வருமானமுள்ள 134 நாடுகளில் Bedaquiline என்னும் அந்த மருந்து பயன்படுகிறது.
காப்புரிமையைச் செயல்படுத்த வேண்டாம் என்று உலக அளவில் நெருக்குதல் ஏற்பட்டது.
Sirturo என்னும் வணிகப் பெயரில் Johnson & Johnson நிறுவனம் மருந்தை விற்பனை செய்கிறது.
கடந்த 40 ஆண்டுகளில் காசநோய் சிகிச்சைக்காக அங்கீகரிக்கப்பட்ட முதல் மருந்து அது.
மற்ற மருந்துகளைவிட அதிகப் பாதுகாப்பானது. அதற்கான காப்புரிமையை Johnson & Johnson விட்டுக் கொடுத்திருப்பது காசநோய்க்கு எதிரான போராட்டத்தில் முக்கிய வெற்றியாகக் கருதப்படுகிறது.
(Visited 3 times, 1 visits today)