ஐரோப்பா

(update) ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை – பல பகுதிகளில் மின் துண்டிப்பு!

ஜப்பானில்  7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்  இன்று பதிவாகியதை தொடர்ந்து பல பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமோரியின் (Aomori) வடக்குப் பகுதியில் உள்ள ஒரு துறைமுகத்தை முதல் சுனாமி அலை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

மற்றொரு அலை ஹொக்கைடோ (Hokkaido) பிராந்தியத்தில் உள்ள உரகாவா நகரத்தை அடைந்ததாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரண்டு அலைகளும் 40 செ.மீ. உயரத்தை கொண்டிருந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அமோரியில் (Aomori) ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அறிவிக்கப்பட்டுள்ளது.

டோஹோகு (Tohoku) மற்றும் ஹொக்கைடோ (Hokkaido) பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நிலைமைய கையாள ஒரு பணிக்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சுமார் 125 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த தீவுக்கூட்டம், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,500 நிலநடுக்கங்களை அனுபவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!