ட்ரம்பின் வரி விதிப்பு – அவசரமாக கூடும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள்!
அமெரிக்கா கிரீன்லாந்தை வாங்க அனுமதிக்காவிட்டால், பல ஐரோப்பிய நாடுகள் மீது வரி விதிக்கப்போவதாக ட்ரம்ப் எச்சரித்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றிய தூதர்கள் இன்று ஒன்றுக்கூடவுள்ளனர்.
ட்ரம்பின் கட்டண அச்சுறுத்தல் குறித்து விவாதிக்க, அவசரக் கூட்டத்தை நடத்த தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் டென்மார்க், நோர்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் மீது 10 சதவீதம் வரி விதிக்கப்போவதாக மிரட்டியுள்ள ட்ரம்ப் கிரீன்லாந்து தனது கட்டளைக்கு இணங்காவிட்டால் அதனை 25 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்துள்ளார்.
ட்ரம்பின் இந்த செயற்பாட்டை பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் விமர்சித்துள்ளனர்.
எந்த மிரட்டலும் அவர்களை பாதிக்காது என்று மக்ரோன் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





