வட அமெரிக்கா

டிரம்பின் வரிகளால் அமெரிக்காவில் கோப்பி விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு

ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரிக் கொள்கை காரணமாக அமெரிக்க கடைகளில் கோப்பி விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் கோப்பி இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரிகள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

அமெரிக்கா ஆண்டுதோறும் கோப்பி இறக்குமதிக்காக சுமார் நூறு பில்லியன் டொலர்களை செலவிடுகிறது.

இதில் அதிக அளவு பிரேசில் மற்றும் கொலம்பியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது அமெரிக்க சந்தையில் காபியின் விலை சுமார் மூன்று டொலர்கள் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதி பல நாடுகள் மீது விதித்த வரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், அமெரிக்க சந்தையில் அனைத்து நுகர்வோர் பொருட்களின் விலைகளும் ஏற்கனவே அதிகரித்துள்ளதாக அமெரிக்க ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!