இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

கிரீன்லாந்தின் எதிர்காலம் குறித்த முடிவு டென்மார்க் இராச்சியத்திற்கும் மட்டுமே சொந்தமானது – ஸ்டார்மர்

கிரீன்லாந்தை கைப்பற்றும் தனது திட்டத்தை எதிர்க்கும் பிரித்தானியா மற்றும் பிற நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வரிகளை விதிக்கும் திட்டம் “முற்றிலும் தவறானது” என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

டவுனிங்கில் (Downing) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

கிரீன்லாந்தின் எதிர்காலம் குறித்த முடிவு “கிரீன்லாந்து மக்களுக்கும் டென்மார்க் இராச்சியத்திற்கும் மட்டுமே சொந்தமானது” எனவும் ஸ்டார்மர் கூறுகிறார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“அமெரிக்காவுடன் ஒரு நல்ல உறவை” வைத்திருப்பது முக்கியம்

டென்மார்க் பிரதேசத்தை முழுமையாக கொள்முதல்செய்ய ட்ரம்ப் விரும்புகிறார், இது அமெரிக்கா மற்றும் உலகளாவிய பாதுகாப்பிற்கு அவசியம்.

வெள்ளை மாளிகை அதை இராணுவ ரீதியாக கூட எடுக்கலாம் என்று கூறியது” என்றார்.

இதை “மிகவும் தீவிரமான சூழ்நிலை” என்று அழைத்தாலும், பழிவாங்கும் வரிகளை அவர் நிராகரிப்பதாகத் தெரிவதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

சனிக்கிழமை, அமெரிக்க ஜனாதிபதி பெப்ரவரி 1 ஆம் திகதிக்குள் பிரித்தானியா டென்மார்க், நோர்வே, சுவீடன், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் பின்லாந்து மீது 10% வரிகளை விதிப்பதாகக் கூறினார். ஜூன் 1 ஆம் திகதிக்குள் கட்டணங்கள் 25% ஆக உயரும் என்றும் அறிவித்தார்.

Sainth

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!