உலகம் செய்தி

கார்க் தீவை கைப்பற்ற ட்ரம்ப் வியூகம்?

ஈரான் பொருளாதாரத்தின் இதயமாகக் கருதப்படுகின்ற கார்க் தீவை கைப்பற்றும் நடவடிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ளலாம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரானின் 90 சதவீத கச்சா எண்ணெய் ஏற்றுமதி கார்க் தீவிலேயே நடைபெறுகின்றது.

இதனால் ஈரானின் வருவாயை முடக்க, இந்த தீவுக்கு ராணுவத்தை அனுப்பி கைப்பற்றும் திட்டம் குறித்து ட்ரம்ப் ஆலோசித்து வருகிறார் எனக் கூறப்படுகின்றது.

எனினும், இந்த தீவுக்கு அமெரிக்க ராணுவம் சென்றால், ஈரான் பதிலடியில் இறங்கும். சவுதி உட்பட வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் கிடங்குகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல ஈரானில் தரைவழி தாக்குதல் அமெரிக்காவுக்கு பெரும் பின்னடைவாக அமையும் என்பதால் இவ்வாறான முயற்சி முன்னெடுக்கப்படமாட்டாது எனவும் சில தரப்பினர் குறிப்பிடுகின்றனர்.

அதேவேளை, மத்திய கிழக்கு போர் இன்று 18 ஆவது நாளாக தொடர்கின்றது. இரு தரப்புகளில் இருந்தும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

ஹார்முஸ் நீரிணைக்கு போர்க்கப்பல்களை அனுப்புமாறு ட்ரம்ப் விடுத்த கோரிக்கையை நேட்டோ நாடுகள் நிராகரித்துள்ளமை அவருக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகின்றது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!