அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக பதவியேற்ற டிரம்ப் வழங்கிய வாக்குறுதி
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனல்ட் டிரம்ப் பதவி ஏற்றுள்ளார்.
அமெரிக்காவிற்குப் பொற்காலம் என்று 78 வயது டிரம்ப் அறிவித்துள்ளார்.
டிரம்ப் அமைதிகாப்பாளராக, அனைவரையும் ஒன்றிணைப்பவராக இருப்பதற்கு உறுதியளித்துள்ளார்.
வெளிநாட்டு போர்களை முடிவுக்குக்கொண்டுவருதல், அமெரிக்க எல்லைகளை விரிவுபடுத்துதல் போன்றவற்றிலும் கவனம் செலுத்தவிருப்பதாக அவர் கூறினார்.
அமெரிக்காவை மீண்டும் சிறப்பாக்குவோம் என்ற முழக்கவரியை டிரம்ப் எப்போதும் வலியுறுத்தியிருக்கிறார்.
உலகளவில் அமெரிக்கா மீண்டும் மதிக்கப்படும் என்று அவர் தொடக்க உறையில் கூறினார்.
வெள்ளை மாளிகைக்கு டிர்ம்பையும் அவர் துணைவியாரையும் ஜோ பைடன் வரவேற்றார்.





