கிரீன்லாந்தை கைப்பற்ற ட்ரம்ப் வகுத்த திட்டம் : அமெரிக்காவில் குடியுரிமை வழங்குவதாக அறிவிப்பு!

ஆர்க்டிக் தீவின் சுயநிர்ணய உரிமையை தனது நிர்வாகம் ஆதரிப்பதாகவும், அதன் மக்களை அமெரிக்காவிற்குள் வரவேற்பதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இந்நிலையில் கிரீன்லாந்தில் உள்ள பலர், தாயகத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதற்கான டிரம்பின் அச்சுறுத்தல்களால் கவலைப்படுகிறார்கள் என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து தங்கள் வசமாக வேண்டும் என ட்ரம்ப் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
அத்துடன் செவ்வாய்க்கிழமை (03.03) உங்கள் சொந்த எதிர்காலத்தை நீங்களே தீர்மானிக்கும் உங்கள் உரிமையை நாங்கள் கடுமையாக ஆதரிக்கிறோம், நீங்கள் விரும்பினால், உங்களை அமெரிக்காவிற்குள் வரவேற்கிறோம்.” எனவும் அவர் கூறியுள்ளார்.
ட்ரம்பின் அறிவிப்பை தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள டென்மார்க்கின் வெளியுறவு அமைச்சர் கிரீன்லாந்து மக்கள் டென்மார்க்கிலிருந்து பிரிந்து “அமெரிக்காவின் ஒருங்கிணைந்த பகுதியாக” மாற விரும்புவதாக நினைக்கவில்லை என்று கூறியுள்ளார்.