இன்றைய முக்கிய செய்திகள் செய்தி வட அமெரிக்கா

விண்வெளியிலிருந்து ஏவுகணை பாய்ச்சினாலும் இடைமறிக்கும் டிரம்ப்பின் Golden Dome திட்டம்

அமெரிக்காவை ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதியதொரு திட்டத்தை அறிவித்துள்ளார்.

அது Golden Dome எனப்படும் ஏவுகணைத் தற்காப்புத் திட்டமாகும். இன்னும் 3 ஆண்டுகளில் திட்டம் செயல்பாட்டிற்கு வந்துவிடும் என்றார்.

திட்டத்திற்கு முதற்கட்ட நிதியாக அவர் 25 பில்லியன் டொலரை அறிவித்தார். ஒட்டுமொத்தச் செலவு 175 பில்லியன் டொலர் வரை ஆகலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தில் ஏவுகணைத் தற்காப்புத் திட்டத்தைத் தாம் உருவாக்குவதற்கு அமெரிக்க மக்களிடம் வாக்குறுதி அளித்திருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

அதற்கான கட்டட வடிவமைப்பு முறை தெரிவு செய்யப்பட்டுள்ளது. கட்டுமான முழுமைபெற்றபின் Golden Dome எனும் அந்தக் கட்டடத்தால் ஏவுகணைகளை இடைமறிக்க முடியும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உலகின் மறுபக்கத்திலிருந்தோ விண்வெளியிலிருந்தோ ஏவுகணை பாய்ச்சப்பட்டாலும் அது சாத்தியப்படும் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

புதிய முறை அமெரிக்காவின் வெற்றிக்கும் நாடு நீடித்திருப்பதற்கும் முக்கியம் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 17 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி