பதவியேற்றப்பின் ட்ரம்ப் செய்யவுள்ள முதற்கட்ட நடவடிக்கை : பலருக்கு பொதுமன்னிப்பு!
அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் பதவி பிரமாணம் செய்த பின் மேற்கொள்ளவுள்ள முதல் நடவடிக்கையாக பலருக்கு பொதுமன்னிப்பு வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,
ஜனவரி 6 கேபிடல் கலவரம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 1,500 க்கும் மேற்பட்ட நபர்களில் பலருக்கு மன்னிப்பு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவர் ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்பு விழா ஜனவரி 20ம் திகதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கருத்து வெளியிட்டுள்ள அவர், டிரம்ப் தனது முதல் நாளில் தனது ஆதரவாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதாக உறுதியளித்திருந்தார்.
இதற்கமைய அவர் தனது ஆதரவாளர்களை விடுதலை செய்வது பற்றி ஆராய்ந்து வருவதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)