டிரம்ப் எடுக்கும் அதிரடி நடவடிக்கை – அமெரிக்காவில் பகுதிநேர வேலைகளை கைவிடும் மாணவர்கள்!
டிரம்ப் எடுக்கும் நடவடிக்கை – அமெரிக்காவில் பகுதிநேர வேலைகளை கைவிடும் மாணவர்கள்
அமெரிக்காவில் தங்களது பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்துக்காக பகுதிநேர வேலைகளை இந்திய மாணவர்கள் கைவிடுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கல்வி பயில எப்-1 விசா பெற்றுச் சென்றிருக்கும் மாணவர்கள் ஒரு வாரத்தில் 20 மணி நேரம் பணியாற்றலாம் என்ற விதி இருந்தபோதும், இந்த தீர்மானத்தை மாணவர்கள் எடுத்துளளது.
கல்லூரி வளாகத்தில் உள்ள உணவகங்கள், எரிவாயு நிரப்பும் நிலையங்கள், சில்லறை வணிக நிறுவனங்கள் போன்றவற்றில் இந்திய மாணவர்கள் பகுதிநேர வேலை செய்து, அதன் மூலம் ஈட்டும் வருவாயைக் கொண்டு தங்களது அத்தியாவசிய தேவைகளை சமாளித்துக்கொண்டிருந்தனர்.
ஒரு மணி நேரத்துக்கு 7 முதல் 10 டொலர்கள் வரை அங்கு வருவாய் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு மாணவர்கள் நாள் ஒன்றுக்கு அவர்களது தேவைக்கு ஏற்ப அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 6 மணி நேரம் வரை பணியாற்றி சம்பளம் ஈட்டி வந்துள்ளனர்.
ஆனால், குடிவரவு அதிகாரிகள், அங்கீகரிக்கப்படாத வேலைகளை ரத்து செய்யும் அபாயம் இருப்பதாகக் கேள்விப்பட்ட பிறகு கடந்த வாரம் ஏராளமான இந்திய மாணவர்கள், தங்களது பகுதிநேர வேலைகளை விட்டுவிட்டனர்.