அமெரிக்காவில் டிரம்ப் விடுத்த காலக்கெடு நிறைவு – பதவி விகும் ஒரு இலட்சம் அரச ஊழியர்கள்
அமெரிக்காவில் ஒரு லட்சம் அரச ஊழியர்கள் தானாக முன்வந்து பதவி விலகவுள்ளனர்.
தானாக முன்வந்து அரசு ஊழியர்கள் தங்கள் பதவி விலகலை இந்த மாத இறுதிக்குள் அறிவிக்க வேண்டும் என ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
நிர்வாக செலவுகளைக் கட்டுப்படுத்தும் விதமாகத் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கமைய, அவர் கொடுத்த காலக்கெடு இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில் இன்று ஒரு இலட்சம் ஊழியர்கள் பதவி விலகவுள்ளனர்.
அத்துடன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாக கொள்கைகளினால், 3 இலட்சம் அரசு ஊழியர்கள், இந்தாண்டு இறுதிக்குள் பதவி விலகவுள்ளனர்.
கடந்த ஆண்டு இறுதியில், 23 இலட்சமாக இருந்த சிவில் பணியாளர்களின் எண்ணிக்கை, இந்த மாத இறுதியில் 21 இலட்சமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நடப்பாண்டின் இறுதிக்குள், 12 சதவீதம் பேர் வெளியேறிவிடுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்பின் கொள்கைகளால், கடந்த ஜூன் மாத இறுதிக்குள், 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட கறுப்பின பெண்கள் தங்கள் பணிகளை விட்டு வெளியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





