ஆப்கானிஸ்தான் போர் குறித்து ட்ரம்ப் பேச்சுக்கு பிரித்தானியா கொந்தளிப்பு
ஆப்கானிஸ்தானில் நடந்த போரின் போது நேட்டோ துருப்புக்கள் “முன்னணியில் இருந்து சற்று விலகி” இருந்ததாக அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறிய கருத்துக்கு பிரித்தானியாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
பிரித்தானியா உள்ளிட்ட நட்பு நாடுகள் எப்போதும் அமெரிக்காவுடன் தோளோடு தோள் நின்று போரில் பங்கேற்றதாக பிரித்தானியாவின் சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைச்சர் ஸ்டீபன் கின்னாக் கூறினார் .
ட்ரம்பின் கருத்துக்கள் , ஆழ்ந்த ஏமாற்றம் அளிப்பவை மற்றும் வெளிப்படையாக தவறானவை” என்றும் அவர் தெரிவித்தார்.
டோரி கட்சித் தலைவர் கெமி படேனோக், ட்ரம்பின் பேச்சை முட்டாள்தனமானது என்று விமர்சித்தார்.
வியாழக்கிழமை ஃபாக்ஸ் நியூஸில் ட்ரம்ப் கூறிய இந்த கருத்துக்கள், பிரித்தானிய அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் படைவீரர்களின் குடும்பத்தினரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
காயமடைந்த ஒரு பிரிட்டிஷ் சிப்பாயின் தாய், இந்த கருத்துக்களை அவமானகரமானவை என்று கூறினார்.
9/11 பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, நேட்டோவின் கூட்டுப் பாதுகாப்பு விதி செயல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, 2001 ஆம் ஆண்டு முதல் பிரித்தானியா அமெரிக்காவுடன் இணைந்து ஆப்கானிஸ்தானில் போரில் ஈடுபட்டது.
இந்த மோதலில் 457 பிரிட்டிஷ் வீரர்கள் உயிரிழந்தனர்.





