வட அமெரிக்கா

அமெரிக்காவில் TikTok செயலி தடை தொடர்பில் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

அமெரிக்காவில் TikTok செயலி தொடர்ந்து நீடிக்க அனுமதி அளிக்க விரும்புவதாக ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதம் அவர் TikTok கணக்கைத் தொடங்கினார். அப்போதிருந்து தம்முடைய காணொளிகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்திருப்பதை டிரம்ப் சுட்டினார்.

தேசியப் பாதுகாப்பு அக்கறையால், அமெரிக்காவில் TikTok செயலிக்குத் தடை விதிக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

அதற்கான உத்தரவுக்கு ஏப்ரல் மாதம் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தனர்.

தடையை எதிர்த்து TikTok தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கப்போவதாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் சென்ற வாரம் கூறியது.

அமெரிக்காவில் TikTok செயலிக்கான தடை நடப்புக்கு வருவதற்கு ஒன்பது நாளுக்கு முன்னர் அதாவது அடுத்த மாதம் 10 ஆம் திகதி உச்ச நீதிமன்ற விசாரணைக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!