அமெரிக்காவில் தொடரும் ட்ரம்பின் அதிரடிகள் – கடுமையாகும் அகதிகள் கட்டுப்பாடுகள்
அமெரிக்காவில் நாட்டுக்குள் நுழையும் அகதிகள் தொடர்பில் ட்ரம்ப் நிர்வாகம் கடுமையான நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.
அத்துடன் இனரீதியாக முன்னுரிமை அளிப்பது தொடர்பிலும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அதற்கமைய அதிகபட்சமாக 7,500 அகதிகள் மட்டுமே அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் ஆட்சிக் காலத்தில் 125,000 அகதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த வரம்பை 7,500 ஆக ட்ரம்ப் நிர்வாகம் அதிரடியாகக் குறைத்துள்ளது.
தேசியப் பாதுகாப்பு மற்றும் அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பு ஆகியவற்றை முக்கியத்துவம் கொடுத்து இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த 7,500 அகதிகளில், தென்னாப்பிரிக்காவிலுள்ள வெள்ளையினத்தைச் சேர்ந்தவர்களுக்குத்தான் அதிகபட்ச அனுமதி அளிக்கப்படும் என்றும் ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.





