இந்திய பிரதமர் மோடிக்கு தொலைபேசி அழைப்பில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த டிரம்ப்
இரு தலைவர்களுக்கும் இடையிலான மற்றொரு நட்புறவு தருணத்தில், இன்று 75 வயதை எட்டிய இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசி அழைப்பு மூலம் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
வாழ்த்துக்கு பதிலளிக்கும் விதமாக Xல் ஒரு பதிவில், மோடி டிரம்பிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
பின்னர் டிரம்ப் ட்ரூத் சோஷியலில்: “எனது நண்பர் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரு அற்புதமான தொலைபேசி அழைப்பு மேற்கொளல்ப்பட்டது. பிறந்தநாள் வாழ்த்துக்கள்! அவர் ஒரு மகத்தான வேலையைச் செய்கிறார். மேலும் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் உங்கள் ஆதரவுக்கு நன்றி!” என்று பதிவிட்டுள்ளார்.
(Visited 4 times, 1 visits today)





