வெனிசுலாவின் புதிய அரசாங்கத்தை எச்சரிக்கும் ட்ரம்ப் – மீண்டும் ஒரு தாக்குதலுக்கும் தயார்!
வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டு தற்போது அமெரிக்காவின் பிடியில் உள்ள நிலையில், ட்ரம்ப் மேலும் ஒரு எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.
வெனிசுலா அதன் எண்ணெய் தொழில் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான நடவடிக்கைகளில் அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு ஒத்துழைக்கத் தவறினால் மேலும் இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அச்சுறுத்தியுள்ளார்.
வெனிசுலாவின் தற்போதைய ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcy Rodriguez) தலைமையிலான அரசாங்கம் அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு முரணாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்தே ட்ரம்ப் மேற்படி எச்சரிக்கை விடுத்துள்ளார்.





