ஈரான் மீது அமெரிக்காவால் குண்டுகள் வீசப்படும் – டிரம்ப் எச்சரிக்கை

ஈரான் அணு ஆயுதக் கட்டுப்பாட்டுக்கு உடன்படாவிட்டால் குண்டுகள் வீசப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் அணு ஆயுதம் தொடர்பான ஐநா.சபையின் உடன்பாட்டுக்கு வராவிட்டால் ஈரான் மீது பாதுகாப்பு சார்ந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் ஈரான் மீது அமெரிக்கா குண்டுகளை வீசும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டிரம்ப் தமது முதல் ஆட்சியின் போது ஈரானுடன் அணு ஆயுதம் தொடர்பான ஒப்பந்தத்தை கைவிடுவதாக அறிவித்தார்.
உரேனியம் உற்பத்தியில் ஈரான் அனைத்து கட்டுப்பாடுகளையும் மீறிவிட்டதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டினார்.
(Visited 2 times, 1 visits today)