ரஷ்யா – உக்ரைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – டிரம்ப் எச்சரிக்கை

ரஷ்யாவும் உக்ரைனும் போரை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்தத் தவறினால், 2 நாடுகளுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அடுத்த 2 வாரங்களில் என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்து தனது முடிவு இருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெறவில்லை என்றால், பெரிய விளைவுகள் ஏற்படக்கூடும் என்று அமெரிக்க ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.
ரஷ்ய மற்றும் உக்ரைன் தலைவர்கள் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட அழுத்தம் கொடுக்கும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி இந்த அறிக்கையை வெளியிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பல நிபந்தனைகளை கூறியிருந்தார்.
உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஐந்து நிரந்தர உறுப்பினர்கள் உட்பட ஒரு குழு நியமிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். இந்த நிபந்தனைகளில் ஜெர்மனி மற்றும் துருக்கியும் அடங்கும்.