மீண்டும் ஈரானை தாக்குவோம் என டிரம்ப் எச்சரிக்கை
ஈரானையும் அதன் உச்சத்தலைவர் ஆயத்துல்லா அலி கமேனியையும் அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார்.
ஈரான் யுரேனிய அளவை மீண்டும் ஆபத்தான அளவுக்கு உயர்த்தினால் அமெரிக்கா இன்னொரு தாக்குதல் நடத்துவதைக் குறித்து யோசிக்கலாம் என அவர் எச்சரித்தார்.
ஈரானின் உச்சத்தலைவர் ஆயத்துல்லா அலி கமேனியின் உயிரை விட்டுவைத்துள்ளதாக டிரம்ப் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
அவருடைய மூன்று அணுச்சக்தித் தளங்கள் அடியோடு அழிக்கப்பட்டன. அவருடைய இருப்பிடம் எங்கு இருந்தது என்று எனக்குத் தெரிந்திருந்தது.
நான் இஸ்ரேலையோ உலகின் ஆக வலிமையான அமெரிக்க ராணுவத்தையோ அவருடைய உயிரை மாய்க்க விடவில்லை. மரணத்திலிருந்து நான் அவரைக் காப்பாற்றினேன். ஈரான் மீதான தடைகளை அகற்றப் போவதில்லை என டிரம்ப் தெரிவித்தள்ளார்.
(Visited 16 times, 1 visits today)





