வட அமெரிக்கா

கனடாவை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளிக்கு டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் விஸ்கி மீது ஐரோப்பிய ஒன்றியம் வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மதுபானப் பொருட்களுக்கு 200% வரி விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா மீதான வரியை ஐரோப்பிய ஒன்றியம் உடனடியாக நீக்கா விட்டால், பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதித்துவ நாடுகளிலிருந்து வரும் அனைத்து வையின்கள், ஷாம்பெயின்கள் மற்றும் மதுபானப் பொருட்களுக்கும் அமெரிக்கா விரைவில் 200% வரி விதிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்பின் இந்த அறிவிப்பு உலகளவில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. அதேவேளை முன்னதாக கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பை அமுல்படுத்தப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

இந்நிலையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த அழுத்ததிற்கு ஒருபோதும் கனடா அடிபணியப் போவதில்லை என கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!