காஸாவை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டுவர விரும்பும் டிரம்ப்
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/tr.jpg)
காஸாவை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விரும்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.
காஸாவை விட்டு வெளியேறும் பாலஸ்தீனர்களுக்கு அடைக்கலம் கொடுக்காவிட்டால் ஜோர்டான் நாட்டுக்கான நிதி உதவியை நிறுத்தப்போவதாக டிரம்ப் கூறியிருந்த நிலையில், ஜோர்டான் மன்னர் அப்துல்லா, டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்து உரையாடினார்.
காஸாவை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, மிகச் சிறந்த சுற்றுலா வாசஸ்தலமாக மாற்ற விரும்புவதாக டிரம்ப் மீண்டும் தெரிவித்தார்.
பாலஸ்தீனர்களை வெளியேற்றாமல் காஸாவை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும் என்பதில் வளைகுடா நாடுகள் ஒருமித்த நிலைப்பாட்டுடன் இருப்பதாக டிரம்பிடம் தான் கூறியதாக ஜோர்டான் மன்னர் தெரிவித்தார்.
(Visited 2 times, 2 visits today)