கனடா மீது மேலும் அழுத்தத்தை பிரயோகிக்கும் ட்ரம்ப் – எண்ணெய், எரிவாயுவிற்கும் தடை!
அமெரிக்க வர்த்தக வரிகளுக்கு எதிராக பதிலடி கொடுப்பதாக ஒட்டாவா உறுதியளித்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கனடா மீது புதிய விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
நட்பு நாடுகளிலிருந்து எண்ணெய், எரிவாயு, வாகனங்கள் அல்லது மர இறக்குமதிகள் அமெரிக்காவிற்கு தேவையில்லை என்று கூறுகிறார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் தனது மெய்நிகர் உரையின் போது, கனடாவுக்கான கடுமையான விமர்சனங்களைப் பகிர்ந்து கொண்ட அதே வேளையில், டிரம்ப் தனது வரி அச்சுறுத்தலில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவை விரோதமானது மற்றும் நியாயமற்றது என்று டிரம்ப் வகைப்படுத்தினார். அத்துடன் அமெரிக்காவின் வர்த்தகப் பொருட்களின் பற்றாக்குறைக்கு கனடாவின் இறக்குமதி கொள்கைகளைக் குற்றம் சாட்டினார்.
(Visited 3 times, 3 visits today)