வட அமெரிக்கா

இஸ்ரேலியப் பிரதமரை சந்திக்கவுள்ள டிரம்ப்

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவை அடுத்த வாரம் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி  டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தற்போது வாஷிங்டனில் இருக்கும்  நெட்டன்யாஹூவின் வேண்டுகோளுக்கு ஏற்ப புளோரிடாவில் உள்ள தம் உல்லாசத் தலத்தில் சந்திப்பு நடக்கும் என்று  டிரம்ப் கூறினார்.

நெட்டன்யாஹூ நாளை அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.

குடியரசுக் கட்சி ஜனாதிபதி  வேட்பாளர் டிரம்ப்புடனும், ஜனநாயக் கட்சி வேட்பாளராகவுள்ள ஹாரிஸுடனும் நட்புறவைப் பேண வேண்டிய கட்டாயம்  நெட்டன்யாஹூவுக்கு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

மீண்டும் ஜனாதிபதி  தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று பைடன் அறிவித்ததால், இஸ்ரேல் குறித்த அமெரிக்காவின் நிலைப்பாட்டைக் கணிக்க முடியாத சூழல் உள்ளது.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்