இன்றைய முக்கிய செய்திகள் செய்தி வட அமெரிக்கா

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆப்பிள் நிறுவனத்திற்கு வரி மிரட்டல் விடுத்த டிரம்ப்

அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிக்கப்படும் என தெரிவித்தார்.

அதன்படி அனைத்து நாடுகளுக்கும் எதிராக வரி விதிப்பை அறிவிப்பை வெளியிட்டார். சீனா மட்டும் பதிலடி கொடுக்கும் வகையில் பதில் வரி விதிப்பை வெளியிட்டது. மற்ற நாடுகள் ஆலோசனை நடத்தி வந்தன.

ஐரோப்பிய ஒன்றியத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தையில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் நேரடியாக 50 சதவீதம் வரி விதிக்க விரும்புகிறேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவில் ஐபோன்களை தயாரிக்காதீர், அப்படி தயாரித்தால் 25% வரி விதிக்க நேரிடும் என ஆப்பிள் நிறுவனத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஐபோன்கள் அமெரிக்காவிலேயே, தயாரிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஆப்பிள் நிறுவனம் சீனாவில் இருந்து உற்பத்தியை குறைத்து, இந்தியாவில் உற்பத்தியை விரிவாக்கி வருகிறது. 2025 மார்ச் வரை, இந்தியாவில் $22 பில்லியன் மதிப்பிலான ஐபோன்கள் உற்பத்தி செய்யப்பட்டன, இது முந்தைய ஆண்டை விட 60% அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 2ஆம் தேதி டொனால்டு டிரம்ப் வரி விதிப்பை அறிவித்தார். பின்னர் 90 நாட்களுக்கு அதை நிறுத்தி வைத்தார். ஜூலை மாதம் தொடக்கத்தில் 90 நாட்கள் முடிவடையும். அதற்குள் பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்த அமெரிக்கா நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

(Visited 2 times, 2 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி