BRICS குழும நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்த ட்ரம்ப்
BRICS குழும நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கவுள்ளதாக அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்ட டொனல்ட் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
அனைத்துலக வர்த்தகத்தில் அமெரிக்க டொலரைப் பயன்படுத்தவில்லை என்றால் அந்த நிலை ஏற்படலாமென அவர் குறிப்பிட்டார்.
BRICS குழுமத்தில் பிரேஸில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் இணைந்துள்ளன.
ட்ரம்ப் தமது கொள்கை இலக்குகளை அடைவதற்கு வரிகளைக் கொண்ட இயக்கத்தைச் செயல்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
தமது Truth Social சமூக ஊடகத் தளத்தில் BRICS குழும நாடுகள் அமெரிக்க டொலரைப் பயன்படுத்தும் என்று கடப்பாடு தெரிவித்தே ஆகவேண்டும் என ட்ரம்ப் கோரியிருக்கிறார்.
ஏனைய நாடுகள் அமெரிக்க நாணயத்துக்குப் பதிலாக மாற்று நாணயத்தைப் பயன்படுத்துவதை அமெரிக்கா பார்த்துக்கொண்டிருக்காது என்று அவர் எச்சரித்தார்.