ரஷ்ய ஜனாதிபதி புட்டின் மீது உச்சக்கட்ட கோபம் – கடுமையாக விமர்சித்த டிரம்ப்

ரஷ்யா உக்ரேன் மீது நடத்தியுள்ள தாக்குதல்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பெரிய அளவில் பொதுமக்களைக் கொல்வதாக அவர் கூறியுள்ளார். தமக்கு நெடுநாளாக தெரிந்த புட்டின் என்ன ஆனார் என்பது தெரியவில்லை என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அவரது செயல்கள் வருத்தமளிப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ரஷ்ய ஜனாதிபதி டிரம்ப் அவ்வாறு சாடுவது அரிது. ரஷ்யா மீது கூடுதல் தடைகளை விதிக்கும் சாத்தியம் குறித்தும் டிரம்ப் பரிசீலிக்கிறார்.
நேற்று உக்ரேன் தலைநகர் கீவ் மீதும் ஏனைய வட்டாரங்கள் மீதும் ரஷ்யா ஆளில்லா வானூர்திகள், ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர்.
2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா உக்ரேன் மீது படையெடுத்த பிறகு நடத்தப்பட்ட மிகப்பெரிய ஆகாயத் தாக்குதல் அது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.