அமெரிக்காவிடம் விற்பனை செய்யப்படும் TikTok செயலி

அமெரிக்காவில் TikTok செயலியின் விற்பனை தொடர்பிலான செயல்பாடுகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
TikTok செயலியின் உரிமையாளரான Byte Dance நிறுவனத்துடன் எதிர்வரும் 5ஆம் திகதிக்குள் ஒப்பந்தம் எட்டப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவில் TikTok செயலியைப் பயன்பாட்டில் வைத்திருக்கத் தாம் விரும்புவதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
Byte Dance நிறுவனம் செயலியை ஏப்ரல் ஐந்தாம் திகதிக்குள் அமெரிக்க நிறுவனத்திடம் விற்பனை செய்யப்பட வேண்டும் என்பது நிபந்தனையாகும்.
இல்லாவிட்டால் தேசியப் பாதுகாப்புக் காரணங்களுக்காக அமெரிக்காவில் அது தடை செய்யப்படும் என்று டிரம்ப் காலக்கெடு விதித்திருக்கிறார்.
இதற்கிடையே, TikTok செயலியை கொள்வனவு பலர் முன்வந்துள்ளதாகக் தகவல்கள் கூறுகின்றன.
இலோன் மஸ்க் மட்டுமின்றி Microsoft நிறுவனம், Oracle மென்பொருள் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களும் அப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.