அமெரிக்க விமானங்கள் அழிக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை – ட்ரம்ப்
சவுதி அரேபியாவின் பிரின்ஸ் சுல்தான் விமான தளத்தில் ஐந்து அமெரிக்க டேங்கர் விமானங்கள் பெருமளவு சேதமடைந்ததாக வெளியான தகவல்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மறுத்துள்ளார்.
ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் விமானங்கள் சேதமடைந்ததாக பல ஊடக தளங்கள் ஒரே இரவில் செய்தி வெளியிட்டன, ஆனால் ட்ரம்பின் ட்ரூத் சோஷியல் தளத்தின் ஒரு பதிவில், சில நாட்களுக்கு முன்பு தளம் தாக்கப்பட்டாலும், விமானங்கள் “தாக்கப்படவில்லை அல்லது அழிக்கப்படவில்லை” என்று கூறுகிறார்.
ஐந்தில் நான்கு விமானங்களுக்கு எந்த சேதமும் இல்லை என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அவை ஏற்கனவே சேவைக்கு திரும்பி விட்டதாகவும் திரும்பிவிட்டன ஒரேயொரு விமானம் மாத்திரம் சிறியளவில் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.




