போருக்கு ஜெலென்ஸ்கியை தான் குறை சொல்லவில்லை – ட்ரம்ப் கருத்து!

போருக்கு ஜெலென்ஸ்கியை தான் குறை சொல்லவில்லை என்று டிரம்ப் கூறுகிறார். மேலும் போர் நிறுத்தம் குறித்த ரஷ்யாவின் முடிவை அமெரிக்கா எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளை மாளிகையில் ஜியோர்ஜியா மெலோனியுடன் நடந்த சந்திப்பின் போது, உக்ரைன் போர் குறித்து டொனால்ட் டிரம்ப் இரண்டு முக்கிய கருத்துக்களை தெரிவித்தார்.
போர் நிறுத்த திட்டம் தொடர்பாக மாஸ்கோவிடமிருந்து பதில் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக அவர் முதலில் கூறினார்.
“இந்த வாரம், மிக விரைவில், அவர்களிடமிருந்து நாங்கள் கேட்கப் போகிறோம்,” என்று அவர் மேலும் விவரங்களை வழங்காமல் தெரிவித்தார்.
மேலும் செலன்ஸ்கி குறித்து பேசிய அவர், “நான் அவரைக் குறை கூறவில்லை, ஆனால் நான் சொல்வது என்னவென்றால், அவர் மிகச் சிறந்த வேலையைச் செய்தார் என்று நான் கூறமாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.