இந்திய பிரதமர் மோடியுடன் நட்பு தொடரும் – எப்போதும் நட்பாகவே இருப்பேன் என கூறிய டிரம்ப்

இந்திய பிரதமர் மோடியுடன் தான் எப்போதும் நட்பாகவே இருப்பேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அதில் எந்தப் பிரச்னையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாஷிங்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்தியா தொடர்பான தனது பதிவு குறித்து இந்திய செய்தி நிறுவனத்தின் கேள்விக்கு பதிலளித்தார்.
அப்போது, ரஷ்யாவிடமிருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்குவது தனக்கு ஏமாற்றமளிப்பதாக தெரிவித்தார்.
தான் இந்தியா மீது மிக அதிகமாக அதாவது 50 சதவீத வரி விதித்ததை குறிப்பிட்ட டிரம்ப், பிரதமர் மோடி 2 மாதங்களுக்கு முன் அமெரிக்கா வந்திருந்ததையும், ரோஸ் கார்டனுக்கு இருவரும் சென்றதையும், ஒன்றாக இணைந்து செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியதையும் நினைவு கூர்ந்தார்.
(Visited 4 times, 4 visits today)