சுவிட்சர்லாந்து மீதான இறக்குமதி வரியை குறைத்த ட்ரம்ப்!
சுவிட்சர்லாந்து மீது விதித்துள்ள 39 சதவீதமான இறக்குமதி வரியை 15 சதவீதமாக குறைக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அமெரிக்காவில் 200 பில்லியன் டொலர் முதலீடு செய்வதாக சுவிட்சர்லாந்து அறிவித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
“இது நமது பொருளாதாரத்திற்கு ஒரு பெரிய நிவாரணம்” என்று சுவிஸ் பொருளாதார அமைச்சர் கை பர்மெலின் (Guy Parmelin) கூறியுள்ளார்.
சுவிஸ் வணிகத் தலைவர்கள் ட்ரம்ப்பை சந்திக்க எடுத்த முயற்சிகள் இந்த ஒப்பந்தத்தை எட்டுவதில் பங்களித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, 2028 ஆம் ஆண்டுக்குள் அமெரிக்காவில் நேரடியாக 200 பில்லியன் டொலர்களை முதலீடு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக பொருளாதார அமைச்சர் கூறினார்.
(Visited 5 times, 5 visits today)





