தேர்தல் பிரச்சாரத்தில் கடந்த மாதம் $139 மில்லியன் நிதி திரட்டிய டிரம்ப்
குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான டொனால்ட் டிரம்ப், ஜூலை மாதத்தில் தனது பிரச்சாரத்தில் 139 மில்லியன் அமெரிக்க டாலர்களை திரட்டியதாகவும், கையில் 327 மில்லியன் டாலர் பணம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
“MAGA இயக்கம் போல் இதுவரை எதுவும் இருந்ததில்லை. ஜூலை மாதத்தில் மட்டும் நாங்கள் $139 மில்லியன் டாலர்களை திரட்டினோம். இப்போது எங்களிடம் $327 மில்லியன் பணம் உள்ளது.” என்று டிரம்ப் தனது சமூக ஊடக தளமான Truth Socialல் தெரிவித்துள்ளார்.
“அமெரிக்காவின் ஜனாதிபதிக்கான எங்கள் பிரச்சாரத்திற்கு நன்கொடை அளித்து, மேலும் பல வழிகளில் உதவி செய்யும் சிறந்த அமெரிக்க தேசபக்தர்களிடமிருந்து கிடைத்த ஆதரவு இவை. நிறைய வேலை செய்ய வேண்டும், ஆனால் நான் உங்களுக்காக எப்போதும் போராடுவேன். எங்கள் நாடு தோல்வியடைந்து வருகிறது, ஆனால் நாங்கள் அதை விரைவாக மாற்றி, மீண்டும் அமெரிக்காவை சிறந்ததாக்குவேன்!,” என்று அவர் தெரிவித்தார்.