அமெரிக்காவின் வரி விதிப்புக்குள்ளான நாடுகளுடன் பேச தயாராகும் டிரம்ப்

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு ஆளான நாடுகளுடன் பேசத் தயார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வரி விதிப்புக்கு ஆளான நாடுகள் உரிய முறையில் அணுகினால் பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக இருப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்கா மோசமான பொருளாதார நிலையை எட்டியதால் இந்த முடிவை எடுத்ததாகவும், வர்த்தக போட்டியால் அமெரிக்கா முழுவதும் உற்பத்தி மற்றும் தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் பெரும் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறினார்.
உலகம் முழுவதும் பங்கு சந்தை வீழ்ச்சி எதிர்பார்த்த ஒன்றுதான் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 1 times, 1 visits today)