சீனாவுடன் வர்த்தகப் பேச்சில் முன்னேற்றம் – பாராட்டிய டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் சீனாவுடனான வர்த்தகப் பேச்சைப் பாராட்டியுள்ளார்.
இருதரப்பும் நட்பார்ந்த ஆக்ககரமான முறையில் மீண்டும் அனைத்தையும் தொடங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீன அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சு இரண்டாம் நாளாகத் தொடரவுள்ளது.
சுவிட்சர்லந்தின் ஜெனிவா நகரில் நடந்த முதல் நாள் சந்திப்பில் அதிகளவு முன்னேற்றம் கண்டிருப்பதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா அறிவித்திருந்த வரிகளைக் குறைக்கும் சாத்தியம் பற்றி இரு நாடுகளின் அதிகாரிகளும் கலந்துரையாடினர். வர்த்தகப் போருக்குத் தீர்வு காண்பதில் இந்தக் கலந்துரையாடல் முக்கியப் படி என்று சீன ஊடகங்கள் கூறுகின்றன.
அமெரிக்கா – சீனப் பொருள்கள்மீது 145 சதவீத வரி விதித்தது. சீனா பதிலுக்கு அமெரிக்கப் பொருள்கள்மீது 125 சதவீத வரி விதித்தது.
இப்போது சீனாவிற்கான வரிகளை 80 சதவீதமாக மாற்றுவது சரியாகத் தெரிவதாய் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சமூக ஊடகங்களில் கூறியிருக்கிறார்.