புலம்பெயர்ந்தவர்களை நாடு கடத்துவதற்கு அமெரிக்க ராணுவத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ள ட்ரம்ப்
ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், எல்லைப் பாதுகாப்பில் தேசிய அவசரநிலையை பிரகடனப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை பெருமளவில் நாடு கடத்துவதற்கு அமெரிக்க இராணுவத்தைப் பயன்படுத்துவதாகவும் திங்களன்று உறுதிப்படுத்தினார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு ட்ரம்ப் தேர்தல் பிரச்சாரத்தின் போது, சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவேன் என்றும், புலம்பெயர்ந்தவர்களை நாடு கடத்துவேன் என்றும் கூறியிருந்தார். குறிப்பாக, மெக்சிகோ எல்லையை உறுதிப்படுத்துவேன் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், அவர் வெற்றி பெற்று அதிபராக இருக்கும் நிலையில், அவரது முதல் நடவடிக்கையாக தேசிய அளவில் அவசர நிலை பிரகடனம் செய்வது, அதன்பின் புலம்பெயர்ந்தவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
டிரம்ப் அதிபராக இன்னும் ஒரு மாதத்திற்கும் மேல் இருக்கும் நிலையில், “இப்போதே நீங்கள் பேக்கிங் செய்து நாட்டை விட்டு வெளியேறுவது நல்லது” என்று டிரம்ப் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
சுமார் 11 மில்லியன் மக்கள் அமெரிக்காவில் சட்டவிரோதமாக வாழ்ந்து வருவதாக அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர். டிரம்பின் நாடு கடத்தல் திட்டம் சுமார் 20 மில்லியன் குடும்பங்களை நேரடியாக பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.