1963ஆம் ஆண்டு மூடப்பட்ட சிறையில் குற்றவாளிகளை அடைக்க டிரம்ப் திட்டம்

1963ஆம் ஆண்டு மூடப்பட்ட சிறையில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை அடைக்க அமெரிக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.
அமெரிக்காவில் கொடூர குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை அடைப்பதற்காக, 1963ஆம் ஆண்டு மூடப்பட்ட அல்காட்ரஸ் சிறைச்சாலையை மீண்டும் திறக்குமாறு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
சான் பிரான்சிஸ்கோ அருகே உள்ள தனி தீவில் இயங்கிவந்த சிறைச்சாலையில், முன்பு பல முக்கிய குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருந்தனர்.
நிர்வாகச் செலவு அதிகரித்ததால் மூடப்பட்டு சுற்றுலா தலமாக மாற்றப்பட்ட சிறைச்சாலையை விரிவாக்கம் செய்து மீண்டும் திறக்க உத்தரவிட்ட டிரம்ப், சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் நடவடிக்கை என விளக்கமளித்துள்ளார்.
(Visited 28 times, 1 visits today)