உலகம் செய்தி

லத்தீன் அமெரிக்காவில் (Latin America) தரைப்படை தாக்குதல்களுக்கு திட்டமிடும் ட்ரம்ப்!

போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் மற்றொரு பகுதியாக லத்தீன் அமெரிக்காவில் (Latin America) தரைப்படை தாக்குதல்களை தொடங்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “நீர் வழியாக வரும் 96 சதவீத போதைப்பொருட்களை நாங்கள் முறியடித்தோம், இப்போது நாங்கள் நிலம் வழியாக தாக்குதல்களை தொடங்குகிறோம்.

நிலம் வழியாகச் செல்வது மிகவும் எளிதானது, அது நடக்கப்போகிறது. நமது நாட்டிற்கு போதைப்பொருட்களைக் கொண்டு வருபவர்கள் இலக்குவைக்கப்படுவார்கள்”  எனக் குறிப்பிட்டுள்ளார்.

தென் அமெரிக்காவின் கடற்கரையில் உள்ள சர்வதேச கடல் பகுதியில் போதைப்பொருள் கடத்தல் படகுகள் மீது பென்டகன் தொடர்ச்சியான தாக்குதல்களைத் நடத்தி வருகிறது.

இந்நிலையில் இந்த  முயற்சியை விரிவுபடுத்த அமெரிக்க ஜனாதிபதி பல நாட்களாக திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

 

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!