செய்தி வட அமெரிக்கா

சட்ட விரோதமாக குடியேறியவர்களை அடைத்து வைக்க தடுப்பு மையம் – டிரம்ப் உத்தரவு

சட்ட விரோதமாக குடியேறியவர்களை அடைத்து வைக்க தடுப்பு மையம் தயாராகி வருவதாக தெரியவந்துள்ளது.

கியூபாவின் குவாண்டனாமோ வளைகுடாவில் கடற்படை நிலையத்தில் இருக்கும் தடுப்பு காவல் மையமானது இதுவரை தீவிரவாதிகளை அடைத்து வைப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் இந்த தடுப்பு காவல் மையத்தை விரிவாக்கம் செய்வதற்கு ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இதற்காக நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் கையெழுத்திட்டுள்ளார்.

இந்த தடுப்பு காவல் மையத்தினை சுமார் 30000 பேர் தங்குவதற்கு ஏதுவான வசதிகள் கொண்டதாக மாற்றும்படி அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய டிரம்ப், ‘‘குவாண்டனாமோ தடுப்பு மையத்தில் அமெரிக்க மக்களை அச்சுறுத்தும் மோசமான குற்றப்பதிவுகளை கொண்ட, சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டை சேர்ந்தவர்கள் தங்கவைக்கப்படுவார்கள்.

அவர்களில் சிலர் மிகவும் மோசமானவர்கள். அவர்களின் சொந்த நாடுகள் அவர்களை தடுத்து வைக்கும் என்று நாங்கள் நம்பவில்லை. அவர்கள் திரும்பி வருவதை நாங்கள் விரும்பவில்லை. எனவே தான் அவர்களை குவாண்டனாமோவிற்கு அனுப்பப் போகிறோம்” என்றார்.

மேலும் டிரம்ப்பின் கடன்கள் மற்றும் மானியங்களுக்கான செலவினங்களை நிறுத்தி வைக்கும் உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இது அரசு நிதியை நம்பி இருக்கும் மாகாணங்கள், பள்ளிகள் மற்றும் பல்வேறு அமைப்புக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. நிதியுதவியை நிறுத்தும் அதிபர் டிரம்பின் உத்தரவு அமலுக்கு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன் மாகாண நீதிபதி அதிபர் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார்.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி