மீண்டும் ஒன்றிணைந்த டிரம்ப்-மஸ்க் – இணையத்தில் வைராகும் புகைப்படம்

கொல்லப்பட்ட சார்லி கிர்க் நினைவஞ்சலியில் ஒன்றிணைந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் மஸ்க் இணைந்திருந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
சார்லி கிர்க்கின் நினைவஞ்சலி நிகழ்வு அரிசோனாவில் நடைபெற்ற நிலையில் டிரம்ப் மற்றும் கலந்துகொண்டார்.
நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் டிரம்பும், தொழிலதிபர் மஸ்க்கும் அருகருகே அமர்ந்தபடி பேசிக்கொண்டிருந்தனர்.
அண்மையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ஒருவரையொருவர் பொதுவெளியில் விமர்சித்துக் கொண்ட நிலையில், கிர்க் நிகழ்ச்சியில் கைகுலுக்கியபடி உரையாடிய புகைப்படம் இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.
டிரம்புடன் பேசியபடி அமர்ந்திருக்கும் இந்த புகைப்படத்தை எலான் மஸ்க் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 2 times, 1 visits today)