இந்தியா

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு முதன்முறை டிரம்ப்,மோடி இடையே பேச்சு வார்த்தை

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் இந்தியப் பிரதமர் மோடி முதன்முறையாக தொலைபேசியில் பேசினார்.இருவரும் ஏறக்குறைய 35 நிமிடங்கள் பேசியதை இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்‌ரி உறுதி செய்தார்.

இரு தலைவர்களுக்கு இடையேயான இந்தப் பேச்சுவார்த்தையின்போது, பாகிஸ்தானுடனான போர் நிறுத்தம் தொடர்பில் எந்தவொரு மூன்றாம் தரப்பின் தலையீட்டையும் சமரசத்தையும் இந்தியா ஏற்காது என பிரதமர் மோடி திட்டவட்டமாகத் தெரிவித்ததாகவும் விக்ரம் மிஸ்ரி கூறினார்.

கனடாவில் இருந்து நாடு திரும்பும் வழியில், அமெரிக்காவுக்கு வர இயலுமா என்று அதிபர் டிரம்ப் விடுத்த கோரிக்கையைப் பிரதமர் மோடியால் ஏற்க முடியவில்லை. அவரது நிகழ்ச்சி நிரல் ஏற்கெனவே திட்டமிடப்பட்டுவிட்டது என்பது குறித்து அதிபர் டிரம்ப்பிடம் விவரிக்கப்பட்டது.

முன்னதாக, அமெரிக்க அதிபரும் இந்தியப் பிரதமரும் ஜி7 உச்ச நிலை மாநாட்டின்போது சந்தித்துப் பேச இருந்தனர். எனினும், இஸ்‌ரேல்-ஈரான் இடையேயான மோதலைத் தொடர்ந்து எழுந்துள்ள பதற்றத்தை அடுத்து, அதிபர் டிரம்ப் உடனடியாக நாடு திரும்பியதால், பிரதமர் மோடியுடனான அவரது சந்திப்பு ரத்தானதுஇதையடுத்து, இரு தலைவர்களும் தொலைபேசி வழி பேசுவதற்கான முன்னெடுப்பை அமெரிக்கா மேற்கொண்டதாக மிஸ்‌ரி விளக்கினார்.

பஹல்காம் தாக்குதல் குறித்தும் அதற்கு இந்தியாவின் பதிலடி குறித்தும் இரு தலைவர்களும் முக்கியமாக விவாதித்தனர். இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதச் செயல்கள் ஒவ்வொன்றும், இனி இந்தியா மீதான போர் எனக் கருதப்படும் என்ற இந்தியாவின் புதிய நிலைப்பாடு குறித்து அதிபர் டிரம்ப்பிடம் மோடி தெரிவித்தார்.

அண்மையில் இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலவிய பதற்றமான சூழலின்போது நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின்போது, அமெரிக்க வர்த்தக உடன்படிக்கை அல்லது அமெரிக்க மத்தியஸ்தம் குறித்து எதுவும் பேசப்படவில்லை என்றும் பிரதமர் மோடி தெளிவுபடுத்தினார்.

“இஸ்லாமாபாத்தின் வேண்டுகோளை ஏற்று இருதரப்பு ராணுவமும் போர் நிறுத்தம் குறித்து நேரடியாகத் தொடர்புகொண்டு பேசி, அதைச் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டது என்றும் மோடி விளக்கினார்,” என்றார் விக்ரம் மிஸ்‌ரி.‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை குறித்து அதிபர் டிரம்ப்பிடம் விவரிக்கப்பட்டது என்றும் எதிர்காலத்திலும் காஷ்மீர், பயங்கரவாத விவகாரங்களில் மூன்றாம் தரப்பின் தலையீட்டை இந்தியா நிச்சயம் ஏற்காது என்பது திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது என்றும் மிஸ்‌ரி மேலும் தெரிவித்தார்.

அதிபர் டிரம்ப் விடுத்த அழைப்பின்பேரில் மிக விரைவில் தாம் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக மோடி தெரிவித்துள்ளார்.இதேபோல், அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ‘குவாட்’ (QUAD) அமைப்பின் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என இந்தியா விடுத்த அழைப்பை அதிபர் டிரம்ப் ஏற்றுக்கொண்டதாகவும் இந்திய வெளியுறவுச் செயலாளர் கூறினார்.

(Visited 8 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே