சிரியா மீதான அமெரிக்கத் தடைகளை நீக்கிய டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சிரியாவிற்கு எதிரான அனைத்துத் தடைகளையும் நீக்குவதாகக் அறிவித்துள்ளார்.
“சிரியாவிற்கு எதிரான தடைகளை நிறுத்த நான் உத்தரவிடுவேன், இதனால் அவர்களுக்கு மகத்துவத்தை அடைய வாய்ப்பு கிடைக்கும்” என்று டிரம்ப் ரியாத்தில் நடந்த முதலீட்டு மன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“இது அவர்கள் பிரகாசிக்க வேண்டிய நேரம். நாங்கள் அவற்றையெல்லாம் அகற்றுகிறோம்,” என்று டிரம்ப் மேலும் தெரிவித்தார்.
“சிரியாவுக்கு வாழ்த்துக்கள், எங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றைக் காட்டுங்கள்.” என வாழ்த்தியுள்ளார்.
(Visited 1 times, 1 visits today)